பரிஸில் இளஞ்செழியன்: முதலமைச்சராக களமிறக்க பிரகடனம்
நீதித்துறைச்சேவையில் பணியாற்றி ஓய்வுபெற்ற நீதிபதி இளஞ்செழியன் குறித்த அதிர்வுகள் அவரது ஐரோப்பியப் பயணத்தில் தொடர்ந்து வருகின்றது.
பிரித்தானியா மற்றும் சுவிஸ் ஆகிய நாடுகளில் தனக்குரிய சேவைநலன் பாராட்டு அரங்குகளில் முன்பே ஏறிய அவர் நேற்று (11) பரிஸ் அரங்கில் ஏறியபோது தனது அரசியல் பிரவேசம் குறித்த ஊகங்களுக்கு பருமட்டான ஒரு விடையை வழங்கியுள்ளதாகவே கருதமுடியும்.
வரும் ஆனால் வராது என்ற திரைப்பட நகைச்சுவையை அவர் தனது உரையின் ஒரு கட்டத்தில் வேடிக்கையாக குறிப்பிட்டாலும் பின்னொரு கட்டத்தில் தமிழர்களின் சாக்கடை அரசியலை பூக்கடை அரசியலாக மாற்றவேண்டிய கடப்பாட்டுச் சிலேடை எதிர்காலத்தில் சுனாமியாக வருவேன் என்ற பாணியிலான அவரது பிரகடனம் வந்தது.
இருப்பினும், நேரடியாக தனது அரசியல் பிரவேசம் அல்லது வடமாகாண சபைத் தேர்தலில் களம் இறங்குவது குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை.
இந்த விடயத்தில் கிட்டத்தட்ட பத்து மாதகாலம் மௌனத்தில் இருந்த அவர் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவை அறிவிக்கவில்லை மற்றும் போட்டியிடும் நோக்கத்தையும் அறிவிக்கவில்லை.
லண்டன் பரிஸ் என அவர் இந்த விடயத்தில் சில கட்டியங்களை வெளிப்படுத்தினாலும் அவர் தனது அரசியல் ஈடுபாட்டை இன்னும் வலுவாக உறுதிப்படுத்தவோ உறுதியாக மறுக்கவோ இல்லை.
ஈழத்தமிழர்களின் அரசியல்பரப்பில் முன்னர் ஒருமுறை தன்னை போலவே ஒரு முன்னாள் நீதிபதியக பிரவேசித்து பின்னர் தனது தலைமைத்துவத்தை வெறும் சடங்காக மாற்றி தோல்வியடைந்த விக்னேஸ்வரன் குறித்த முன்னுதாரணம் சிலவேளைகளில் இளஞ்செழியனுக்கு எச்சரிக்கையை வழங்குகின்றது போலும்.
இளஞ்செழியனை பொறுத்தவரை அவர் நீதித்துறையில் அனுபவத்தைக் கொண்ட ஒருவராக இருந்தாலும் அவர் இதுவரை ஆட்சி அனுபவம் இல்லாத ஓய்வுபெற்ற ஆளுமையாக இருக்கின்றார்.
இருப்பினும், சிறப்பான ஒரு அரசியல் அணிக்கு தலைமை தாங்ககூடிய ஒருவராக அவர் மாறவிரும்பினால் அதனை பகிரங்கமாக வெளிப்படையாக அறிவிப்பதே உசிதமானது என்ற கருத்து உள்ள நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்தி வருகின்றது பைிசி தமிழின் இன்றைய செய்தி வீச்சு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |