கம்பளை – கண்டி பிரதான வீதியில் விபத்து: ஒருவர் பலி
கம்பளை – கண்டி பிரதான வீதியில் கெலிஓயா , சரமட விகாரைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று (12) இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
@lankasrinews கம்பளை – கண்டி வீதியில் விபத்து - ஒருவர் பலி! #KandyRoad #GampolaAccident #SriLankaNews #RoadAccident #TrafficUpdate #BreakingNews #CentralProvince #OneDead #SriLankaTraffic #AccidentNews
♬ original sound - Lankasri News
காவல்துறையினர் விசாரணை
நுவரெலியாவில் இருந்து கொழும்பை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த கடை ஒன்றின் மீது மோதியுள்ளது.
அத்துடன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றுடனும் மோதிய நிலையில் வீடொன்றின் மதில்மீது மோதி நின்றுள்ளது.
இந்நிலையில் விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
மேலும் விபத்து தொடர்பில் பேராதனை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |