செம்மணியில் புதைக்கப்பட்டுள்ள நீதி : பிரித்தானியாவிலிருந்து வந்த கோரிக்கை
யாழ் - செம்மணி மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் (Uma Kumaran) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna) செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்படும் அகழ்வுப் பணிகளின் போது நாளுக்கு நாள் அடையாளம் காணப்படும் என்புத்தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதுடன் குறித்த விடயம் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, ”செம்மணியில் உள்ள மனிதப் புதைகுழியின் அளவு பெரும் பேரழிவு. அகழப்படும் ஒவ்வொரு புதைகுழிக்கு பின்னாலும் துயரத்தில் சிக்குண்ட உண்மை மற்றும் நீதியை தேடும் ஒரு குடும்பம் உள்ளது.
விசாரணை நடைபெறுவதை உறுதி செய்தல்
சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும்.
மனித புதைகுழி தொடர்பான விசாரணைக்கு பிரித்தானியா தொழில்நுட்ப உதவியை வழங்குமா என கேள்வியெழுப்பியிருந்தேன்.
இந்த விடயம் குறித்து சமீபத்தில் பிரித்தானியாவின் வெளியுறவுச் செயலாளருக்கு நான் கடிதம் எழுதினேன், அதனை வாசித்துக்கொண்டிருப்பதை அவர் உறுதி செய்தார்.
சர்வதேச நட்பு நாடுகளுடன் இணைந்து இங்கிலாந்து நமது பங்கை முழுமையாக ஆற்ற வேண்டும். நாடாளுமன்றம் திரும்பியதும் நான் அவரைத் தொடர்புகொள்வேன்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் மாலை திருவிழா
