கறுப்பு யூலைக்கான பொறுப்புக்கூறலை மூடிமறைக்கும் ஜேவிபி : தவிசாளர் நிரோஷ் விசனம்

By Sathangani Jul 23, 2025 08:51 AM GMT
Report

தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட படுகொலைகள் நடைபெற்றன என்ற உண்மையையும் அநீதிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்ற கடப்பாட்டினையும் மூடி மறைக்கும் செயலாகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடு அமைந்துள்ளதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா  நிரோஷ் (Thiagaraja Nirosh) தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜே.வி.பியின் உத்தியோகபூர்வ இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் சங்கம் கறுப்பு யூலை நிகழ்வுகளை சகோதரத்துவ நாளாக மடைமாற்றம் செய்ய எத்தனிக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இலங்கையில் தமிழ் மக்கள் அடையாளப்படுத்தப்பட்டு தேடியளிக்கப்பட்ட கறுப்பு யூலை நினைவுகளின் 42ஆவது ஆண்டினை உணர்வுபூர்வமாக எமது இனம் அனுஸ்டிக்கின்றது.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா நிதியுதவி : கேள்வியெழுப்பிய சிறீதரன்

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா நிதியுதவி : கேள்வியெழுப்பிய சிறீதரன்

 வெலிக்கடை சிறையில் படுகொலை

கடந்த 42 ஆண்டுகளுக்கு முன் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 54 அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறையில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.

தமிழர்களை வாக்காளர் பட்டியலுடன் தேடிச் சென்று மூவாயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்களை உயிருடன் தீயில் இட்டும் இதர கொடூரங்களுக்குள்ளாக்கியும் கொன்றழித்தனர்.

கறுப்பு யூலைக்கான பொறுப்புக்கூறலை மூடிமறைக்கும் ஜேவிபி : தவிசாளர் நிரோஷ் விசனம் | Jvp Covering Up Accountability For Black July

ஒன்றரை இலட்சம் பேர் வீடற்றவர் ஆயினர். 8 ஆயிரம் வீடுகளும் 5 ஆயிரம் வணிக நிறுவனங்களும் கொள்ளையிடப்பட்டன அழிக்கப்பட்டன. இக்காலகட்டத்தில் 300 மில்லியன் டெலர்கள் அழிக்கப்பட்டன.

இதனை பன்னாட்டு மனித உரிமைகள் ஆணையம் தமிழருக்கு எதிரான திட்டமிட்ட இனப் படுகொலை என விபரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ் இனப்படுகொலையை அரச இயந்திரமே தகவமைத்து வழிப்படுத்தியது என்பதற்கு சகல ஆதாரங்களும் உள்ளன.

வதை முகாம்களை நடத்தியவர்களை கைது செய்வோம்: சூளுரைக்கும் பிமல்

வதை முகாம்களை நடத்தியவர்களை கைது செய்வோம்: சூளுரைக்கும் பிமல்

சகோதரத்துவ நாள்

நாட்டில் இனப்படுகொலை நடைபெற்றமைக்கு பொறுப்புக் கூறல் எதையும் முன்வைக்காமல் அத் தேவையினை போர்த்திமூடிவிடும் உத்தியுடன் இன்றைய அரசாங்கம் நிதானமாகச் செயற்படுகின்றது. இப்படுகொலைகளுக்கு ஜே.வி.பியும் பொறுப்புடையது.

கறுப்பு யூலைக்கான பொறுப்புக்கூறலை மூடிமறைக்கும் ஜேவிபி : தவிசாளர் நிரோஷ் விசனம் | Jvp Covering Up Accountability For Black July

ஆதலால் அரசாங்கத்தின் மாணவர் அமைப்பான ஜே.வி.பி தலைமைச் செயலகத்திற்குள்ளேயே இயங்கும் உத்தியோகபூர்வ இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் அமைப்பு ஊடாக அரச அனுசரணையுடன் இன்றைய நாளை சகோதரத்துவ நாள் என பிரகடனப்படுத்தப்படுகின்றது. இதற்காக யாழில் அரச வளங்கள் ஈடுபடுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இது தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையினையும் அதற்கான பொறுப்புக்கூறலையும் திட்டமிட்டு மறைக்கின்ற இல்லாமலாக்குகின்ற முயற்சியாகும். இதனை நாம் கண்டிக்கின்றோம்.

ராஜபக்சாக்களை ஒத்ததாக இன்றைய அரசாங்கம் மென்வலு அணுகுமுறையில் தமிழருக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றோம்.” என குறிப்பிட்டுள்ளார்.

கண்கள் பிடுங்கப்பட்டு கொலை - வெலிக்கடை சிறை புதைக்குழி எங்கே - கேள்வி எழுப்பும் எம்.பி

கண்கள் பிடுங்கப்பட்டு கொலை - வெலிக்கடை சிறை புதைக்குழி எங்கே - கேள்வி எழுப்பும் எம்.பி

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோப்பாய், Ontario, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, Wuppertal, Germany, Toronto, Canada, Ottawa, Canada

13 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
நன்றி நவிலல்

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், உடுப்பிட்டி, Worthing, United Kingdom

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Stuttgart, Germany, Mont-de-Marsan, France

15 Oct, 2025
மரண அறிவித்தல்

பெரியபளை, கல்கிசை, கனடா, Canada

13 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, Mordon, United Kingdom

15 Dec, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, நுணாவில், Toronto, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஏழாலை, Bad Harzburg, Germany

10 Nov, 2025
16ம் நாள் அந்திரெட்டியும்(சொர்க்கவாசல்), நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Bremen, Germany

10 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025