ஜேவிபிக்கு கத்தோலிக்க வாக்குகள் இல்லை! பிரசன்ன ரணதுங்க திட்டவட்டம்
கத்தோலிக்க மக்களை கொன்று குவித்த ஜே.வி.பிக்கு இம்முறை கத்தோலிக்க வாக்குகள் கிடைக்கும் என நம்ப முடியாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
களனியில் நேற்று (21) இடம்பெற்ற குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு அரிசி வழங்கும் வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கத்தோலிக்க வாக்குகள் கிடைக்காது
ஜே.வி.பி.யின் தேசியப் பட்டியலில் இருந்த இப்ராஹிமின் மூன்று மகன்களும் கொல்லப்பட்டனர், அதற்கு குழுக்களை நியமித்து விசாரணை நடத்தி நேரத்தை வீணடிப்பதில் அர்த்தமில்லை.
இப்ராஹீம் இன்னும் உயிருடன் இருக்கிறார், அவருடைய மகன்கள் ஏன் இப்படிச் செய்தார்கள் என்று அவரிடம் கேட்க வேண்டும். அதை அவர் நாட்டிற்கு சொல்வார் என்றார் எல்லாம் முடிந்து விடும்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்களை தேசியப் பட்டியலில் வைத்துக் கொண்டு விசாரணை நடத்துவதாகக் கூறும் ஜே.வி.பி.யை விட கேலிக்கூத்து இந்த நாட்டில் வேறு எதுவும் இல்லை." என்றார்.
எனவே கத்தோலிக்க மக்களை கொன்று குவித்த ஜே.வி.பிக்கு இம்முறை கத்தோலிக்க வாக்குகள் கிடைக்கும் என நம்ப முடியாது என அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |