ஆடம்பரமாக வாழும் ஜே.வி.பி தலைவர்கள் : கட்சியை விட்டு வெளியேறும் அடிமட்டத் தொண்டர்கள்
அரசாங்கத்தின் முன்னணித் தலைவர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டதால், ஜேவிபிக்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த முழுநேர உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர் என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், ரோஹன விஜேவீர மற்றும் சோமவன்ச அமரசிங்க போன்ற தலைவர்களின் உண்மையான தியாகங்களைக் கண்டு, எந்தவித ஊதியமும் பெறாமல் தங்கள் குடும்பம் மற்றும் பிள்ளைகளுக்கான கடமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, கட்சிக்காக அயராது உழைத்த முழுநேர உறுப்பினர்கள், தற்போதைய தலைவர்களின் நடவடிக்கைகளால் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
கோடிக்கணக்கில் வாழ்க்கையை அனுபவிக்கும் ஜே.வி.பி தலைவர்கள்
ரஷ்யாவில் ஜார் மன்னர் காலத்தைப் போலவே, இன்றும் அனுர திசாநாயக்க உள்ளிட்ட தலைவர்கள் கோடிக்கணக்கில் வாழ்க்கையை அனுபவித்து வரும் வேளையில், கட்சி உறுப்பினர்கள் உண்ணுவதற்குச் சிறிதளவும் இல்லாமல் துன்பப்படுகின்றனர் என்று ராஜித சேனரத்ன கூறுகிறார்.

ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |