விடுதலை வேட்கையில் வேரூன்றி நின்ற அண்ணன் சிவாஜிலிங்கத்தின் மறைவு பேரிழப்பாகும்:பாஸ்கரன் கந்தையா

Jaffna Sri Lanka Politician Baskaran Kandiah
By Sindu Nov 15, 2026 03:26 AM GMT
Report

தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை வேட்கையில் ஆழமாக வேரூன்றி நின்ற அண்ணன் சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவு, எமது இனத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என பாஸ்கரன் கந்தையா தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினராகத் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கிய அவர், 2001 முதல் 2010 வரை யாழ்ப்பாண மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

2013ஆம் ஆண்டு வடமாகாண சபை உறுப்பினராகத் தெரிவானபோது, இறுதிப் போர் நடந்த முள்ளிவாய்க்கால் மண்ணிலேயே பதவிப் பிரமாணம் எடுத்தார்.

2010, 2019 ஆகிய ஆண்டுகளில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு, தமிழர் தரப்பின் கோரிக்கைகளைத் தேசிய அரங்கில் உரத்து ஒலித்தார். இறுதியாக வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராகப் பொறுப்பேற்றுத் தன் மண்ணின் மக்களுக்குப் பணியாற்றினார்.

பதவிகளைவிட, அவர் வாழ்ந்த விதமே அவரை அடையாளப்படுத்தியது. தன் வாழ்நாள் முழுவதையும் தமிழ்த் தேசத்தின் விடுதலைக்காகவும், தமிழ் மக்களின் அரசியல் விடிவுக்காகவும் அர்ப்பணித்தவர் அவர்.

தமிழர் தாயகத்தின் மீது சிங்கள தேசம் மேற்கொண்ட அடக்குமுறைகளுக்கு எதிராக எவ்வித அச்சமும் இன்றிக் குரல் கொடுத்தவர். போர்க்குற்றங்களுக்குச் சர்வதேச விசாரணை வேண்டும் என்று பல ஆண்டுகளாக வெளிப்படையாக வலியுறுத்தியவர். பலரும் அச்சத்தில் ஒதுங்கியிருந்த காலப்பகுதியில் நினைவேந்தல்களைத் துணிவோடு முன்னெடுத்தவர்.

நோயோடு போராடிய இறுதி நாட்கள் வரை, இந்த இனத்தின் அரசியல் விடிவே தன் ஒரே குறிக்கோள் என்பதிலிருந்து அவர் விலகவில்லை. தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் ஆன்மாவில் அவர் ஆற்றிய பங்கை, அவர் வகித்த பதவிகளால் அளவிட முடியாது.

தனித்து நிற்க நேர்ந்த வேளைகளிலும் தன் நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்காமல், நீதிக்கான கோரிக்கையும் உயிர்நீத்தவர்களுக்கான நினைவும் மறக்கடிக்கப்படாமல் காத்த சிலரில் அவரும் ஒருவர். அத்தகைய ஒருவரின் இழப்பு, இந்த இனத்திற்கு அரசியல் ரீதியாகவும் ஆழமான வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று நாம் உணர வேண்டிய இன்னொரு கசப்பான உண்மையும் உண்டு. நம் தேசத்தையும் தேசிய இனத்தையும் உளமார நேசிக்கும், எஞ்சியிருக்கும் பற்றாளர்களை நாம் தொடர்ச்சியாக இழந்துகொண்டிருக்கிறோம். இந்த இழப்புகள் இப்போது முடிவற்ற தொடர்கதையாகி வருகின்றன.

இந்நிலையில், தமிழ்த் தேசிய இனம் தன் அரசியல் அடைவுகளை எட்டுவதற்கும், அதற்கான ஒழுங்கமைந்த பாதையில் உறுதியோடு பயணிப்பதற்கும் இன்று எந்த அளவு வலிமை பெற்றிருக்கிறது என்ற கேள்வி நம் முன்னே நிற்கிறது. அண்ணன் சிவாஜிலிங்கம் போன்றோரின் தியாகத்திற்கும் உழைப்பிற்கும் நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி, இந்தக் கேள்விக்குச் செயலால் விடை தருவதே ஆகும்.

அவர் சுமந்த கனவைத் தொடர்ந்து சுமப்போம். அவர் காட்டிய உறுதியை நம் வழிகாட்டியாகக் கொள்வோம். அண்ணனின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தோழர்களுக்கும், ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய உலகிற்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்த் தேசிய அரசியலின் துணிச்சலான குரல் ஓய்ந்தது! சிவாஜிலிங்கம் நள்ளிரவு காலமானார்

தமிழ்த் தேசிய அரசியலின் துணிச்சலான குரல் ஓய்ந்தது! சிவாஜிலிங்கம் நள்ளிரவு காலமானார்

வவுனியாவில் இடம்பெற்ற மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு!

வவுனியாவில் இடம்பெற்ற மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga, Canada

15 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Greven, Germany, Münster, Germany

08 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026