இலங்கை - இந்திய மீனவர் விவகாரம் - “கச்சதீவு ஒப்பந்தம்” ஒன்றே நிரந்தர தீர்வு
இலங்கை கடற்பரப்பிற்குள் - இந்திய தமிழக மீனவர்கள் எல்லை மீறி மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதால் இரு தேசங்களில் வாழும் ஒரு இனத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், வட கிழக்கு பிராந்தியங்களில் கடற்றொழிலை நம்பியே கூடுதலான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறும் செயல் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. எமது நேச நாடு இந்தியா. எமது ஒரு சமூகத்திற்குள் முரண்பாடு ஏற்படாத வண்ணம் அரசுகள் எல்லை மீறும் மீனவர்களை கைது செய்து இந்திய அரசுடன் ஒப்படைக்க வேண்டும்.
அத்துடன் வடபுல மீனவர்களின் தொழில் பாதிக்காத வண்ணம் பாதுகாக்க வேண்டும். மாறாக உயிர் சேதம் நிகழாவண்ணம் பாதுக்காக்கப்பட வேண்டியது கட்டாயம்.
இலங்கை கடற்படையினரின் படகில் மோதுண்டு நான்கு மீனவர்கள் இறந்த விடையம் மென்பது வேதனையானது. எமது இலங்கை தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தல்கள் எழும்போதெல்லாம் குரல் கொடுப்பவர்கள் தமிழக மீனவ சமூதாயமே. இரு தேசங்களிலும் வாழும் ஒரு இனத்தை கடந்த காலங்களில் மோதல்களை உருவாக்கிய வரலாறுகளும் உண்டு.
1964 உருவாக்கப்பட்ட கச்சதீவு ஒப்பந்தம் சரியாக கையாளப்பட்டால் எந்த ஒரு பிரச்சினைகளும் எழாது.
சரியான எல்லைகள் வகுக்கப்பட்டால் பிரச்சினைகள் ஏற்படமாட்டாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.