ஜெனிவா கூட்டத்தில் பங்கு பற்றிய கைலாசாவின் பெண் சாமியார் தொடர்பில் வெளியாகிய தகவல் (காணொளி)
சர்ச்சை சாமியார் நித்யானந்தாவின் கைலாசா நாட்டின் பிரதிநிதிகள் குழு ஜெனிவா கூட்டத்தில் கலந்து கொண்ட விடயம் தற்போது வைரலாக பரவிவருகின்றது.
ஜெனிவாவில் கடந்த பிப்ரவரி 24 ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் பொருளாதார, சமூக பண்பாட்டு உரிமைகள் என்ற தலைப்பிலான கூட்டத்தில் கைலாசா சார்பில் பெண் சாமியார் விஜய பிரியா தலைமையிலான தூதுக்குழு பங்கேற்றது.
இந்த மாநாட்டில் விஜய பிரியா பேசும் போது, எங்களது பரமகுருவான நித்யானந்தா மற்றும் கைலாசாவில் வசிக்கும் 20 லட்சம் இந்து மக்கள் மீதான அடக்குமுறையை தடுக்க சர்வதேச நாடுகள் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என கூறியுள்ளார்.
கைலாசா பிரதிநிதி
விஜய பிரியாவுடன் கைலாசா லாஸ் ஏஞ்சல்ஸ் தலைவர் முக்திகா ஆனந்த், செயின்ட் லூயிஸ் தலைவர் சோனா காமத், இங்கிலாந்தின் கைலாசா சபை தலைவர் நித்யா ஆத்ம தாயி, பிரான்சின் தலைவர் நித்யா வெங்கடேசனந்தா ஆகிய 5 பெண் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் மாநாட்டில் பங்கேற்று பேசிய கைலாசா பிரதிநிதி விஜய பிரியா பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளது.
Some more amazing pics from the United Nations Central Hall.
— Atul Khatri (@one_by_two) March 2, 2023
United States of Kailasa shines on Global stage: Represented at UN-Geneva talks on Women in leadership pic.twitter.com/eI6vDatIY5
அமெரிக்காவில் வாஷிங்டனில் அவருக்கு வீடு இருப்பதாகவும் ஐ.நா.வுக்கான கைலாசா நாட்டின் நிரந்தர தூததராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கைலாசாவில் இணையதள பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
[UT04XX ]
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)