மற்றுமாரு சக்திவாய்ந்த பாதாள உலக உறுப்பினர் வெளிநாடொன்றில் சிக்கினார்!
"மிதிகம சூட்டி" எனப்படும் பிரபாத் மதுஷங்க என்ற இலங்கை பாதாள உலக தலைவரை ஓமான் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் தெற்கு மாகாணத்தில் செயல்படும் ஒரு சக்திவாய்ந்த பாதாள உலகக் குழுவின் தலைவராகவும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் உறுப்பினராகவும் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
அத்துடன், இலங்கை அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில், சர்வதேச காவல்துறையினர் அவரைக் கைது செய்வதற்கான சிவப்பு அறிவிப்பை கூட வெளியிட்டுள்ளது.
ஹரக் கட்டர்வுடன் நெருங்கிய தொடர்பு
காவல்துறை வட்டாரங்களின்படி, அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலகத் தலைவர் "ஹரக் கட்டா" உடன் நெருங்கிய உறவைப் பேணி வந்துள்ளதாகவும் அவரது முக்கிய உதவியாளராகவும் செயல்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
முதலில் துபாய்க்குத் தப்பிச் சென்ற மிதிகம சூட்டி, பின்னர் ஓமானில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் தங்கியிருந்தபோது அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சந்தேகநபர் வெளிநாட்டில் இருந்தபோதும், தென் மாகாணத்தில் உள்ள தனது கூட்டாளிகளைப் பயன்படுத்தி கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை செயல்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
