தாஜுதீன் படுகொலை : சிஐடியிடம் சிக்கிய முக்கிய தகவல்
பிரபல முன்னாள் ரக்பி வீரர் வசிம் தாஜுதீன் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் அவர் பயணித்த காரைத் பின் தொடர்ந்து சென்ற ஜீப் ரக வாகனத்தில் கஜ்ஜா என்ற அனுர விதானகமகே பயணித்துள்ளமை இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
ரக்பி வீரர் வசிம் தாஜுதீனின் கொலை குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 13 ஆண்டுகளாக விசாரணை செய்து வருகின்றது. இருப்பினும், இந்த கொலையுடன் தொடர்புடைய நபரை இன்னும் உறுதியாக அடையாளம் காண முடியவில்லை.
மனைவி அளித்த சாட்சியம்
இத்தகைய சூழலில், மித்தெனியவில் கொல்லப்பட்ட அனுர விதானகமகே, தாஜுதீன் கொல்லப்படுவதற்கு முன்பு அவரது காரைப் பின்தொடர்ந்த ஜீப்பில் இருந்ததாக அவரது மனைவி சமீபத்தில் விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்திருந்தார்.தொடர்புடைய சிசிடிவி காட்சிகளைக் காட்டி நடத்தப்பட்ட விசாரணையின் போது இது நடந்தது.
அதன்படி, விசாரணை அதிகாரிகளால் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் சம்பவத்துடன் தொடர்புடைய படங்களில் உள்ள நபர் கஜ்ஜா என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனை மேலும் உறுதிப்படுத்துவதற்காக மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
