கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரம் - சமலை சந்தித்துப் பேசிய தமிழ் அரசியல் தலைமைகள்
kalmunai
sumanthiran
gajendrakumar ponnambalam
chamal
c v wigneswaran
By S P Thas
கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அமைச்சர் சமல் ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த சந்திப்பு இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன், கலையரசன், கோவிந்தன் கருணாகரம் (ஜனா) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அதன் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் ஆகியோரும் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பிலான குறித்த விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்