தமிழ்த் தேசிய வரைபடத்திலிருந்து அழிக்கப்படும் தமிழர் பகுதி ! சுகாஷ் ஆதங்கம்
தமிழ்த் தேசிய வரைபடத்திலிருந்து அம்பாறை (Ampara) மாவட்டம் காணாமல் போகும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் (Sugash) எச்சரித்துள்ளார்.
கல்முனை (Kalmunai) வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிர்வாக அடக்குமுறைகளை அனுமதிப்பதனால் இவ்வாறு நடக்குமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அடக்குமுறை
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கல்முனை வடக்கு பிரதேச செயலகம் 33 ஆண்டுகளாக சுயாதீனமான ஒரு பிரதேச செயலகமாக இயங்கி வருகின்றது.
தற்போது நடைபெறும் கல்முனை வடக்கு பிரதேசத்தின் மீதான நிர்வாக அடக்குமுறையானது அம்பாறை மாவட்டத்தை தமிழ்த் தேசிய வரைப்படத்திலிருந்து அகற்றும் சூழ்ச்சி ஆகும்.
இதற்கு எதிராக தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்” என கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |