கற்பிட்டியில் வெடிப்புச் சம்பவம் : ஒருவர் பலி:ஒருவர் காயம்
Puttalam
Sri Lanka Air Force
Bomb Blast
By Sathangani
கற்பிட்டி விமானப் படை பயிற்சி முகாமில் நேற்று (26) ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் விமானப் படை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
விமானப் படை பயிற்சி நடவடிக்கையின் போது நேற்று (26) பிற்பகல் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒருவர் உயிரிழப்பு
இந்த சம்டபவத்தில் பொல்கஹாவெல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர்கள் பயிற்சிக்காக பயன்படுத்திய வெடி பொருளே வெடிப்பு சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு தரப்பினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்