சடலங்களை பொறுப்பேற்க மறுக்கும் அரச மருத்துவமனை
Sri Lankan Peoples
Colombo Hospital
By Sumithiran
களுபோவில போதனா வைத்தியசாலைக்கு வெளியில் இருந்து கொண்டு வரப்படும் அடையாளம் தெரியாத மற்றும் உரிமையாளர் இல்லாத சடலங்களை இன்று முதல் அதன் பிரேத அறையில் வைப்பதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பில், கிளிஸ்ஸ மற்றும் நுகேகொட காவல்துறை பிரிவிலுள்ள அனைத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கும் எழுத்து மூலம் அறிவிக்க வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொள்ளளவை தாண்டிய சடலங்கள்
களுபோவில போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வெளியில் இருந்து கொண்டு வரப்பட்ட 28 இனந்தெரியாத சடலங்கள் கடந்த 14 மாதங்களாக பிரேத பரிசோதனை செய்யாமல் விடப்பட்டமையே இந்த நிலைமைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி