தேசிய பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டது - பாதுகாப்புச் செயலர் பெருமிதம்
“சுபீட்சத்தின் நோக்கு” எனும் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்துக்கு அமைவாக ஸ்ரீலங்காவின் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்தார்.
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் செயற்பாடுகளை சம்பிரதாய பூர்வமாக மீள ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
ஸ்ரீலங்காவின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் அதேசமயம் திறமையாக செயல்படுவதற்கும் அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாட்டில் எமது அதிகபட்ச பங்களிப்பை வழங்குவதற்கும் அனைவரும் உறுதிபூண வேண்டும்.
ஜனாதிபதியின் வழிகாட்டுதலுக்கு அமைய, அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பு மற்றும் முப்படையினரின் சுறுசுறுப்பான செயற்பாடுகள் என்பன காரணமாக நாட்டில் கொவிட் - 19 வைரஸ் பரவலை கட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது. இதற்காக செயலாற்றிய அனைவருக்கும் நன்றிகள் என்றார்.