அமைச்சுப்பதவியை துறக்கத் தயார் - முக்கிய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
Champika Ranawaka
Gotabaya Rajapaksa
Kanchana Wijesekera
By Sumithiran
மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பதவியை பாட்டலி சம்பிக்க ரணவக்க ஏற்றுக்கொண்டால் பதவி விலகத் தயார் என மின்வலு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சை சம்பிக்க ரணவக்க பொறுப்பேற்றால் நல்லது என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அது அரச தலைவரால் தீர்மானிக்கப்படும் என்றும், அதற்கு தமக்கு ஆட்சேபனை இல்லை என்றும் அவர் கூறினார். அமைச்சுப் பதவியை வழங்குவதற்கு பொருத்தமானவர் இருந்தால் எந்த நேரத்திலும் அமைச்சுப் பதவியை வழங்கத் தயார் என அரச தலைவருக்கு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்