இனத்திற்காக தங்களை அர்ப்பணித்தவர்களை பராமரிக்க வேண்டியது எமது கடமை - கந்தையா பாஸ்கரன்

IBC Tamil
By pavan Aug 26, 2023 10:03 AM GMT
Report

ஒரு காலத்தில் இனத்திற்காக தங்களை அர்ப்பணித்தவர்கள் இன்று தங்களின் அவயங்களை இழந்து எங்கள் முன் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் அவர்களை பராமரிக்க வேண்டியது எங்களின் கடமை என கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

இன்று (26) கிளிநொச்சி விவேகானந்த நகரில் அமைந்துள்ள வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தில் கௌரிசங்கரி தவராஜா ஞாபகார்த்த அறக்கட்டளையின் ஏற்பாட்டில் அவரது இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு உலருணவுப் பொதிகள் மற்றும் பிள்ளைகளுக்கு காலணி என்பன வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது உரையாற்றுகையிலேயே கந்தையா பாஸ்கரன் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இங்கு எங்கள் முன் உள்ளவர்கள் காலத்தின் தேவை கருத்தி எங்களுக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள், எங்களுக்காக தங்களின் கண், கை, கால்களை இழந்தவர்கள்.

இனத்திற்காக தங்களை அர்ப்பணித்தவர்கள்

இனத்திற்காக தங்களை அர்ப்பணித்தவர்களை பராமரிக்க வேண்டியது எமது கடமை - கந்தையா பாஸ்கரன் | Kandiah Baskaran Said Tamil Peoples Care

எனவே இவர்களை பராமரிக்க வேண்டிய பொறுப்பும் , கடமையும் எங்களுக்குண்டு, அதன் காரணமாக தான் அதிபர் சட்டத்தரணி கே.வி. தவராஜா அவர்கள் தனது துணைவியாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வை முன்னிட்டு என்ன நிகழ்வை ஏற்பாடு செய்யலாம் என வினவிய போது நான் அவரை இந்த இடத்திற்கு அழைத்து வந்தேன்.

இங்கே இப்படியொரு சமூகம் இருப்பது பலருக்கு தெரியாது இது மிகவும் கவலைக்குரியது எனவே இங்கு வருகை தந்துள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இவர்கள் கரினை கொள்ள வேண்டும், இவர்கள் பராமரிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த கந்தையா பாஸ்கரன் உலகையே அச்சுறுத்திய கொடிய கொரோனாவால் உயிரிழந்த சட்டத்தரணி கௌரி தவராஜா அவர்களை மக்கள் அதிகம் நேசிக்கின்றமைக்கு காரணம் அவர் இவ்வாறானவர்களை அதிகம் நேசித்தவர், தனது தொழில் வல்லமையை இனத்திற்காக பயன்படுத்தியவர் என்றுத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், அதிபர் சட்டத்தரணி கே.வி தவராஜா உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்

GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி