மீண்டும் கண்டி - கொழும்பு பிரதான வீதி திறப்பு
Kandy
Weather
Floods In Sri Lanka
Flood
By Thulsi
கண்டி - கொழும்பு பிரதான வீதி மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.
எனினும் அதற்கான நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தை வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நேரக் கட்டுப்பாடு
அதனடிப்படையில், கொழும்பு-கண்டி A01 வீதியானது காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மாத்திரமே போக்குவரத்துக்குத் திறந்திருக்கும்.

குறித்த வீதியில் நடைபெற்று வரும் அத்தியாவசிய மறுசீரமைப்புப் பணிகள் மற்றும் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு இந்த நேரக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் மற்றும் சாரதிகள் இந்த நேரக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி