யாழில் 33 வருடங்களின் பின் புதுப்பொலிவு பெறவுள்ள ஆலயம்
Sri Lanka Army
Jaffna
Hinduism
By Vanan
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மேற்கு, மாங்கொல்லை ஞான வைரவர் ஆலய பாலாலைய கும்பாபிஷேகம் நாளை(25) வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.
இன்று(24) புதன்கிழமை மாலை 3 மணியளவில் கணபதி ஹோமத்துடன் பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளது.
அபிஷேக பூஜை வழிபாடுகள்
நாளை காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் பூஜைகள் ஆரம்பமாகி காலை 7.30 மணி தொடக்கம் 9.30 மணிவரையிலான சுப வேளையில் பாலஸ்தாபன கும்பாபிசேஷகம் இடம்பெற்று தொடர்ந்து அபிஷேக பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.

குறித்த ஆலயமானது கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர் பாதுகாப்பு வலய பகுதிக்குள் இருந்த நிலையில், கடந்த ஜூன் மாத கால பகுதியில் ஆலய சூழலையும், அதனை அண்டிய சில பிரதேசங்களில் இருந்தும் இராணுவத்தினர் வெளியேறி சென்றிருந்தனர்.
இந்நிலையில், ஆலய புனரமைப்பு வேலைகளை முன்னெடுக்கும் முகமாக பாலஸ்தாபன கும்பாபிசேஷகம் இடம்பெறவுள்ளது.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட்
22 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்