ந்தளாயில் விபத்து - சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி
srilanka
police
death
investigation
kanthalay
By Vasanth
திருகோணமலை - கந்தளாய் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியால் சென்றுகொண்டிருந்த நபரொருவருடன் லொறியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்து நேற்று(5) மாலை இடம் பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அக்போபுர, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த சேனக்க திஸாநாயக்க 43 வயதுடைய வாய்பேச முடியாத ஒருவரே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் தலைமையக பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி