கபிலவின் மரணம்: எந்தவொரு திட்டவட்டமான முடிவையும் எடுக்க முடியாது என்கிறார் விஜேபால
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் குறித்து இந்தக் கட்டத்தில் எந்தவொரு திட்டவட்டமான முடிவையும் எடுக்க முடியாது என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே உறுதியான முடிவை வெளியிட முடியும் என்று அவர் கூறியள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
மரணம் குறித்த விசாரணைகள்
“மரணம் குறித்த விசாரணைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. பிரேதப் பரிசோதனை தற்போது நடைபெற்று வருகிறது, அதைத் தொடர்ந்து நீதித்துறை மருத்துவ அதிகாரிகள் காரணத்தைத் தெளிவுபடுத்துவார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினரும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
நேற்று மாலைதான் தங்களுக்கு பிடியானை குறித்த தகவல் கிடைத்தது. காவல்துறை ஏற்கனவே நடவடிக்கை எடுத்துவிட்டது.
மறுநாள் காலையில் கைது நடவடிக்கையை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்ததால், இரவில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று காவல்துறை எதிர்பார்த்திருக்காமல் இருந்திருக்கலாம்.
அவர் இதற்கு முன்னர் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டவர். மேலும் இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவும் நடைமுறையில் இருந்தது.
இந்த விவகாரம் குறித்து நீங்கள் காவல்துறை தலைமை ஆய்வாளரிடம் (ஐஜிபி) விளக்கம் கோர வேண்டும்.
இருப்பினும், இந்தக் கட்டத்தில் உறுதியான கருத்தைத் தெரிவிக்க முடியாது. பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னரே அறிக்கை வெளியிட முடியும்,'' என்று அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |