கார்த்திகைப் பூவை அவமதித்த விவகாரம்: ஐங்கரநேசன் கடும் கண்டனம்
தமிழர்களின் உணர்வுகளை அவமானப்படுத்தவே கார்த்திகைப் பூவினை பாதணிகளில் பதித்துள்ளதாக தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் (Ponnudurai Ayngaranesan) தெரிவித்துள்ளார்.
இந்த செயற்பாட்டை தென்னிலங்கை அரசியல் சக்திகளின் சதித்திட்டமாகவே தான் பார்ப்பதாகவே அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழர்களின் உணர்வுகளைக் கேலி செய்தல்
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் “தென்னிலங்கையில் செருப்பு உற்பத்தியை மேற்கொள்ளும் நிறுவனம் தமிழர்களின் பாரம்பரியமானதும், தனித்துவம் வாய்ந்த கார்த்திகைப் பூவினை பாதணிகளில் பதித்து அவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கியுள்ளனர்.
தமிழ் தேசிய பரப்பிலேயே கார்த்திகைப் பூ குறித்த ஒரு காலத்தில் மாத்திரம் பூக்கின்ற தனித்துவமான மலர் என்பதை கருத்தில் கொள்ளாது குறித்த நிறுவனம் கால்களுக்கு அணியும் பாதனைகளில் அதனைப் பதித்து தமிழர்களின் உணர்வுகளை அவமானப்படுத்தியுள்ளது.
உற்பத்திகளை புறக்கணிதத்தல்
இதேவேளை DSI நிறுவனம் விற்பனைக்கு விட்டுள்ள பாதணிகளை மீளப் பெற வேண்டும். அத்துடன் இந்த விடயம் தொடர்பாக தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.
அதுவரை தமிழ் மக்கள் குறித்த நிறுவனத்தின் உற்பத்திகளை புறக்கணிக்க வேண்டும்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |