தகுந்த நேரத்தில் சரியான பாடத்தை கற்றுக்கொள்வீர்கள்! கோட்டாபய அரசுக்கு எச்சரிக்கை
மதத்தலைவர்கள், அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைக்கு மதிப்பளிக்காத அரசாங்கம் அதற்கான பாடத்தை மிகவும் கடினமான வழிகளில் கற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்கவேண்டும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அவசரமாக துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டாமென மதத்தலைவர்கள், அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அரசாங்கம் மதிப்பளிக்கவில்லை.
துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டமூலம் நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணானது என்று உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் பொதுமக்களின் கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் செவிமடுப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை என்றால், அதற்கான பாடத்தை அரசாங்கம் மிகவும் கடினமான வழிகளில் கற்றுக்கொள்ள நேரிடும்.
துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டமூலத்தின் 34 பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவையாக இருப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையிலும், அதனை நிறைவேற்றிக்கொள்வதற்கு அரசாங்கம் காண்பித்த அவசரம் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,