தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கடுமையாக விமர்சித்த கருணா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சோரம் போய் வெறுமனவே ஆசாபாசங்களுக்கும் மற்றும் பதிவிகளுக்காகவும் அடிமையாகி சுக்கு நூறாகி சிதைவடைந்து கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சரான கருணா அம்மான் (Karuna Amman) என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் (Vinayakamurthy Muralitharan) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை மட்டக்களப்பு மொறக்கொட்டான்சேனையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழர்கள் உரிமையை காப்பாற்றுவதற்காக தேசிய ஜனநாயக முன்னணி கட்சியான எமது கட்சி வடக்கு கிழக்கில் போட்டியிடுகின்றது.
போலி வேசங்கள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேசங்களை தற்போது வெளிக்கொண்டு வந்துள்ளது, போலி வேசங்களை போட்டு மக்களை இவ்வளவு காலமும் ஏமாற்றி தேசியம் தேசியம் என பேசி வருகின்ற அரசாங்கங்களிடம் இலஞ்சங்களை வாங்கி கொண்டு மக்களை ஏமாற்றியுள்ளனர் என இந்த ஜனாதிபதி தேர்தலின் பிற்பாடு வெளிப்படையாக மக்களுக்கு தெரியவந்துள்ளது.
எனவே, மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் ஒரு காத்திரமான தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என்பது எங்களது நோக்கம் கடந்த காலத்தில் அந்த சந்தர்ப்பங்களை அவர்களுக்கு வழங்கியிருந்தேன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றாக இருக்கவேண்டும் என நான் அந்த காலத்தில் இடையூறு விளைவித்ததில்லை தேசிய தலைவருடன் நானும் சேர்ந்து அந்த கட்சியை உருவாக்கியவன்.
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மதுபானசாலை அனுமதிபத்திரம் சொகுசுவாகனங்களை வாங்கி வீடுகளை அமைத்தது மட்டுமன்றி வெளிநாடுகளில் வீடுகளை வாங்கிய அமைச்சர்கள் கூட இருக்கின்றனர் ஆனால் அவர்கள் அங்கு சோரம் போனவர்களாக போய் வெறுமனவே ஆசாபாசங்களுக்கு அடிமையாகி இன்று கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |