பௌத்த விகாரைக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த கருணா குழு
மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளராக செயற்பட்ட சேனாதியின் படுகொலை என்பது காலத்தால் மறக்க முடியாத ஒன்று.
இந்த கொலை மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவ உயர் பாதுகாப்பு வளையத்துக்குள் இடம்பெற்றமையே இந்த கொலைபின்னணியின் சூத்திரதாரிகளை வெளிச்சம்போட்டு காட்ட அப்போதைய ஊடகவியலாளர்களை தூண்டியுள்ளது.
இந்த சம்பவத்தினத்தன்று காவல்துறை விசேட பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்ததாக அப்போதைய கருத்துக்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையிலேயே குறித்த படுகொலை இடத்தில் கருணா குழுவின் முக்கியஸ்தராக கருதப்படும் சச்ச மாஸ்டரை கண்டதாக அப்போதைய கருத்துக்களில் பரவலாக பேசப்பட்டுள்ளன.
குறித்த சம்பவ தினத்தில் மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கரும்புலிகள் நிகழ்வை இலக்கு வைக்க கொழும்பில் தங்கவைக்கப்பட்ட கருணாகுழு அங்கு விரைந்த நிலையில் பொலனருவையில் உள்ள விகாரை ஒன்றின் முன் தரித்து நின்ற நிலையில், பின்னர் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கருணா குழுவின் முக்கியஸ்தராக கருதப்படும் சச்ச மாஸ்டரை வைத்து மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் குறித்து ஆராயும் ஐ.பி.சி தமிழின் உண்மைகள் நிகழ்ச்சி இன்றும் மற்றுமொரு வாய்மெய் ஒளியாவனத்தை தொகுத்து வருகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |