மட்டக்களப்பில் இருந்து கருணா குழுவால் வெளியேற்றப்பட்ட யாழ் வர்த்தகர்கள்
2004 ஆம் ஆண்டு மார்ச்மாதம் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த பின்னர் கருணா மட்டக்களப்பை விட்டு வெளியேற முன்னர் அந்த மாவட்டத்தில் பிரதேசவாதம் எனும் பூச்சாண்டியை துணைக்கழைத்து கருணாவும் அவரது குழுவினரும் ஆடிய கோர தாண்டவங்களை வெறுமனே நின்று வேடிக்கை பார்ப்பதை தவிர வுறு எதுவும் செய்யமுடியாத நிலையிலேயே மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தில் வசித்து வந்த மக்கள் அந்த நேரத்தில் இருந்தார்கள்.
அந்த நேரத்தில் அச்சத்தின் பிடியில் தமது வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்த அந்தப்பிரதேச மக்கள் கொடிய கனவு எப்போது கலையும் விடிவு எப்போது ஏற்படும் என அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்கள்.
மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாண வர்த்தகர்களை வெளியேற்றியபோதே சச்சி மாஸ்ரர் என்ற பெயர் வெளியில் தெரியவந்தது.அந்த நேரம் இவர் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல.
யார் இந்த சச்சி மாஸ்ரர். இவர் ஏன் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டார். சிறை சென்ற இவருக்கு பின்னர் என்ன நடந்தது என்பது தொடர்பாக விரிவாக ஆராய்கிறது இந்த உண்மைகள் நிகழ்ச்சி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |