தன்னை கைது செய்ய வேண்டாம்! கோட்டாபயவின் மனுவுக்கு நீதிமன்றின் உத்தரவு
புதிய இணைப்பு
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலைத் தடுக்கும்படி கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த ரிட் மனுவை, மேலதிக பரிசீலனைக்காக ஓகஸ்ட் 3ஆம் திகதி வரை ஒத்திவைத்து மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மனு இன்று (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் கோட்டாபய ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் ரொமேஷ் டி சில்வா, தனது பதிலுரையை சமர்ப்பித்தார்.
அதன்பிறகு, மேலதிக சமர்ப்பிப்புகளுக்காக மனுவை ஓகஸ்ட் 3ஆம் திகதி வரை ஒத்திவைக்த்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் தன்னைக் கைது செய்து காவலில் வைப்பதைத் தடுக்கும் உத்தரவு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணைக்காக அவர் இவ்வாறு நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு
கடந்த 9ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், நீதியரசர் ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, மனுவை நான்காவது நாளாகப் பரிசீலித்து, அதை இன்றைய தினத்திற்கு வரை ஒத்திவைத்திருந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 19 மணி நேரம் முன்