ஆளும்தரப்புக்கு விழுந்த அடி - மூன்றாவது தடவையும் தோற்கடிக்கப்பட்டது பட்ஜெட்
budget
srilanka podujana peramuna
defeated
By Sumithiran
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆளுகைக்குள் உள்ள கதிர்காமம் பிரதேச சபையின் வருடாந்த வரவு செலவுத் திட்டம் மூன்றாவது தடவையாகவும் 10 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இன்றைய வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக தலைவர் உட்பட மூவர் மாத்திரம் வாக்களித்த அதேவேளை, பிரதேச சபையின் 13 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.
இதன்படி கதிர்காமம் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்தை பொதுஜனபெரமுனவின் தலைவர் தலைமையிலான ஆளும் கட்சியால் தொடர்ந்து மூன்றாவது தடவையாகவும் நிறைவேற்ற முடியாமல் போனது.
இச்சம்பவத்தையடுத்து பிரதேச சபையில் காரசாரமான சூழல் உருவானதுடன், தேர்தல் முடிந்து சபையை விட்டு வெளியேறிய தவிசாளரிடம் எதிர்க்கட்சியான பிரதேச சபை பிரதிநிதிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
மரண அறிவித்தல்