கதிர்காம கந்தனுக்கு இன்று கொடி
covid
temple
start
kataragama
By Vanan
கதிர்காம கந்தனின் கொடியேற்ற விழா இன்று 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய தினம் முதலாவது பெரஹர மூலம் வீதி உலா நடைபெறும் என கதிர்காம கோயிலின் பஸ்நாயக்க நிலமே டிஷன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இறுதி நாள் பெரஹர 23ஆம் திகதி இரவு வீதி உலா வரவுள்ளதாகவும் பெரஹராவின் சம்பிரதாய சடங்குகள் அனைத்தும் முறையாக நடைபெறும் எனக் கூறிய அவர், இம்முறை உற்சவம் மக்களது பங்களிப்பின்றி நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
எனினும் பெரஹராவில் யானைகள், நாட்டியங்கள் உள்ளிட்ட கலாசார அம்சங்கள் அனைத்தும் இடம்பெறும் எனவும் அவை சுகாதார நெறிமுறைகளுக்கு அமைய நடத்தப்படும் என்றும் நிலமே தெரிவித்தார்.
ஜூலை 24 ஆம் திகதி நீர் வெட்டுடன் உற்சவம் பூர்த்தி அடையும் என்று கோயிலின் பஸ்நாயக்க நிலமே தெரிவித்தார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்