40 நாட்களின் பின் காத்தான்குடி விடுவிப்பு
srilanka
corona virus
kaththankudi
By Vasanth
40 நாட்களின் பின்னர் காத்தான்குடி நகரில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்ட 10 கிராம சேவகர் பிரிவுகளில் இன்று வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதி முதல் மூடப்பட்டிருந்த காத்தான்குடி நகரின் 10 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு திறக்கப்பட்டன. கொரோனா பரவல் அதிகரிப்பை அடுத்து காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவின் 18 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தது.
தொடரான அன்டிஜன் பரிசோதனைகளை அடுத்து குறித்த பிரதேசத்தின் 8 கிராம சேவையாளர் பிரிவுகளில் ஏற்கனவே தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கப்பட்டது.
தொடர்ந்தும் கடந்த 40 நாட்களாக 10 கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் இருந்த நிலையிலேயே இன்று அவை விடுவிக்கப்பட்டன.
4ம் ஆண்டு நினைவஞ்சலி