இத்தாலியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு மர்மமான முறையில் வந்த சடலம்
police
sri lanka
people
By Shalini
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒரு நபரின் உடல் துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
நேற்று (18) மாலை 4.00 மணியளவில் சடலம் எடுத்து வரப்பட்டுள்ளதாகவும், இறந்தவர் கம்பஹாவில் வசிக்கும் 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவர் இத்தாலியில் அப்ரினியாவில் பணிபுரிந்ததாக அஜித் ரோஹண தெரிவித்தார்.
இத்தாலியில் பணியிடத்தில் நடந்த ஒரு சம்பவத்தில் இவர் இறந்துவிட்டார் என்றும் அவரது உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளதாகவம் குறிப்பிடப்பகின்றது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்