கட்டுநாயக்க விமான நிலையம் தொடர்பில் நிமல் சிறிபால டி சில்வாவின் நிலைப்பாடு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பயணிக்கவிருந்த விமானங்கள் தாமதமடைந்தமை தொடர்பில் தாம் வருத்தமடைவதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர், விமான சேவைகள் தாமதமடைந்தமை தொடர்பில் ஆராயப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
விமான பற்றாக்குறை
“விமான சேவைகள் அதிகார சபையின் நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஏனைய சகல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் எதிர்வரும் திங்கட்கிழமை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இதன்போது சகல விமான பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு நான் மன்னிப்பு கோருகின்றேன்.” என்றார்.
கடந்த சில நாட்களாக சிறிலங்கன் விமான சேவையில் தாமதம் நிலவியிருந்தது. சிறிலங்கன் விமான சேவை நிறுவனத்திடம் போதிய விமானங்கள் இன்மையே இதற்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.