அமெரிக்க கடவுச்சீட்டுகளில் ட்ரம்ப்பின் உருவம் - உலகின் மிகவும் பாதுகாப்பான ஆவணம்
வரையறுக்கப்பட்ட அமெரிக்க கடவுச்சீட்டுகளில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உருவத்தை உள்ளடக்குவதற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தின் 250 ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஜூலை மாதம் கடவுச்சீட்டுகள் வெளியிடப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிக்காட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது..
இதில் கலைப்படைப்புகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட படங்கள்” இடம்பெறும் என்றும், அமெரிக்க கடவுச்சீட்டை “உலகின் மிகவும் பாதுகாப்பான ஆவணங்களில் ஒன்று” என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரப் பிரகடனத்தின் வாசகங்கள்
கடவுச்சீட்டுக்களின் உள் அட்டையில், சுதந்திரப் பிரகடனத்தின் வாசகங்கள் மற்றும் அமெரிக்கக் கொடியைச் சுற்றி டொனால்ட் டிரம்பின் புகைப்படம் இடம்பெற்றிருக்கும் மேலும் அவரது கையொப்பம் தங்க நிறத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை” முன்னிட்டு குறைந்த எண்ணிக்கையிலான கடவுச்சீட்டுகளை வெளியிடப் போவதாகவும், ஆனால் எத்தனை கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என்பதை அமெரிக்க வெளியுறவுத் துறை உறுதிப்படுத்தவில்லை
ஜனநாயக நாடொன்றில் பதவியில் இருக்கும் ஒரு தலைவரின் உருவம் கடவுச்சீட்டில் அச்சிடப்படுவது மிகவும் அரிதான ஒரு சந்தர்ப்பமாகக் கருதப்படுவதுடன், இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமையும் எனவும் அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |