கேகாலையில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு:கணவர் வைத்தியசாலையில்
கேகாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று (29) காலை 5.10 மணியளவில் முச்சக்கரண்டியொன்றும் வான் ஒன்றும் மோதிக்கொண்டதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்த வானொன்று எதிர்திசை பாதைக்கு திரும்பி கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.
வான் ஓட்டுநர் கைது
முச்சக்கர வண்டியில் பயணித்த தேவாங்கலை, மாவனெல்லாவைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்த விபத்தில் உயிரிழந்தார்.

முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற அவரது கணவர், படுகாயங்களுக்கு உள்ளாகி கேகாலை ஆதார வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
வான் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதோடு கேகாலை காவல் பிரிவின் போக்குவரத்துப் பிரிவினர் இதுகுறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |