இன்று காலைமுதல் அமுலுக்கு வந்த ‘லொக்டவுண்’
srilanka
isolation
covid 19
kegalle
By Vasanth
கொரோனா தொற்றுக்கு இலக்கான நால்வர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இன்று காலை முதல் கேகாலை சுகாதார சேவை அதிகாரப் பிரிவுக்கு உட்பட்ட புலுகஹதெனிய – சமகிகம, எட்டோருவாக பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை புலுகஹதெனிய பொது சுகாதார பரிசோதகர் பண்டார அத்தநாயக்க உறுதிப்படத்தியுள்ளார். கமகிகம – எட்டோருவாவ பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்கான 4 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து 15 குடும்பங்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கு முன் அந்தப் பகுதியில் 8 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கேகாலை மாவட்டத்தில் இதுவரை 12 கொரோனா மரணங்கள் இடம்பெற்றுள்ளன.
அந்த மாவட்டத்தில் 2022 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில், அவர்களில் 1285 பேர் பூரண குணடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி