மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி கடத்தப்பட்ட கேரளா கஞ்சா: காவல்துறை சுற்றிவளைப்பு
மன்னார்(Mannar) - பேசாலை பகுதியிலிருந்து கொழும்பு (Colombo) நோக்கி கடத்தப்பட்ட 28 கிலோ 760 கிராம் கேரளா கஞ்சா வவுனியா தலைமை காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (10.07.2024) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா தலைமைப் காவல்நிலைய விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா தலைமை காவல்நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரே இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
மன்னார், பேசாலை பகுதியிலிருந்து கூலர் ரக வாகனம் ஒன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டு கொழும்பு நோக்கி கடத்தப்பட்ட போதே காவல்துறையினர் கேரளா கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையின் போது கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் காவல்துறையினர் மீட்டுள்ளதுடன், சந்தேக நபர்களான பேசாலை பகுதியை சேர்ந்த 27 மற்றும் 30 வயதுடையை இரண்டு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




