கேரளத்து பெண்களின் அடர்த்தி கூந்தலின் இரகசியம்: இந்த ஒரு எண்ணெய் போதும்..!
அனைவருக்குமே, தங்களது கூந்தல் பட்டுபோன்று மென்மையாக மற்றும் பளபளப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
அதற்காக பல முயற்சிகளை முன்னெடுப்போம். அதிலும் கேரளத்து பெண்கள் கூந்தல் அழகுக்கும் பெயர் போனவர்கள். அந்தவகையில் கேரள பெண்கள் தங்களது முடி வளர்ச்சிக்கு என்ன செய்வார்கள் என பார்க்கலாம்.
கேரள பெண்களின் கூந்தல் தடிமனாகவும் கருமையாகவும் அழகாக பளபளப்பாகவும் இருக்கும். இதற்கு அவர்கள் பயன்படுத்தும் எண்ணெய்யும் ஒரு காரணமாகும்.
அவர்களின் பாரம்பரிய முடி எண்ணெய் அவர்களின் தலைமுடிக்கு பல வகையில் உதவுகிறது. மூலிகைப் பொருட்களின் கலவையானது அதை மிகவும் சிறப்பானதாக்குகிறது,மேலும் உங்கள் தலைமுடியை பளபளப்பாகவும் மென்மையாகவும் மாற்றுகிறது.
கடுமையான முடி உதிர்வு உள்ளவர்களுக்கு அல்லது பொடுகு அல்லது முன்கூட்டிய முடி நரைத்தவர்கள் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம். அந்தவகையில் தற்போது இந்த எண்ணெயை எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
1 கைப்பிடி கறிவேப்பிலை
1 டீஸ்பூன் வெந்தயம் (4 மணி நேரம் ஊற வைக்கவும்)
2 டீஸ்பூன் செம்பருத்தி தூள்
10-15 சின்ன வெங்காயம்
கற்றாழை ஜெல்
500 மில்லி தேங்காய் எண்ணெய்
10-12 கருப்பு மிளகு
செய்முறை
முதலில் வெந்தயத்தை 4 மணிநேரத்திற்கு ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும். கறிவேப்பிலையைக் கழுவி, கற்றாழை ஜெல்லையும் எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
கறிவேப்பிலை, வெந்தயம், செம்பருத்தி தூள், வெங்காயம் மற்றும் கற்றாழை ஆகியவற்றை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து, பொருட்களை நன்றாக கலவையாக்கவும். பின் அதை இரும்பு பாத்திரத்திற்கு மாற்றி உருகிய தேங்காய் எண்ணெயை கலந்து தீயை குறைத்து வைத்து கொதிக்க வைக்கவும்.
இது பொதுவாக 10-12 நிமிடங்கள் எடுக்கும் கருப்பு மிளகு சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். ஆறியதும் வடிகட்டி கண்ணாடி குடுவையில் 2 மாதங்களுக்கு சேமித்து வைக்கலாம்.
நீங்கள் எண்ணெயைப் பயன்படுத்த விரும்பும் போதெல்லாம், ஒரு சிறிய கிண்ணத்தில் தேவையான அளவு எண்ணெயை எடுத்து, எண்ணெயை சூடுபடுத்துவதற்கு சூடான நீரில் கிண்ணத்தை வைக்கவும்.
இந்த எண்ணெயை உங்கள் உச்சந்தலையில் 3 முதல் 5 நிமிடங்கள் மசாஜ் செய்து விட்டு 30 நிமிடங்களுக்கு பின் கழுவலா். தொடர்ந்து இவ்வாறு பயன்படுத்தி வர சிறந்த பலனை அடையலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |