இலங்கை ஊடாக வரவுள்ள பேராபத்து - கடும் எச்சரிக்கை விடுத்துள்ள இந்தியா
srilanka
iindia
i.s.i.s
By Sumithiran
இலங்கையிலிருந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்திய கடலோர பகுதிக்குள் ஊடுருவ வாய்ப்புக்கள் உள்ளதாக இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த புலனாய்வுப் பிரிவு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து கேரள மாநிலம் மற்றும் கடற்கரையோரப் பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை,இலங்கையிலிருந்து கடல்வழியாக கர்நாடகாவின் அலபுல்லா மாவட்டத்தில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் பிரவேசிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.