கேரளாவை உலுக்கிய கொடூரம்: ஒன்றரை வயதுக் குழந்தை அடித்துக் கொலை - தாய் உட்பட இருவர் கைது!

Kerala Law and Order World
By Shalini Balachandran Jun 01, 2026 08:32 AM GMT
Report

கேரளாவில் ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று உடல் ரீதியான கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நெடுமங்காடு அருகே உள்ள பனவூர் பகுதியில் வசித்து வந்த ஆர்ஷித் என்ற ஒன்றரை வயதுக் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பாகக் குழந்தையின் தாய் மற்றும் அவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்...!

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்...!

உடல்நலக்குறைவு 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகத் தெரிவித்து அவரது தாய் மற்றும் குறித்த நபரால் குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இருப்பினும், மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

கேரளாவை உலுக்கிய கொடூரம்: ஒன்றரை வயதுக் குழந்தை அடித்துக் கொலை - தாய் உட்பட இருவர் கைது! | Kerala Toddler Murdered By Mother And Lover

உணவு சாப்பிட்ட பிறகு குழந்தை திடீரென மயங்கி விழுந்துவிட்டதாக சந்தேகநபர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், காவல்துறையினர் முதற்கட்டமாக இது இயற்கைக்கு மாறான மரணம் (Unnatural death) என வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இருப்பினும் குழந்தையின் பிரேதப் பரிசோதனை (Autopsy) அறிக்கையில் குழந்தை கொடூரமாகத் தாக்கப்பட்டு அந்தத் தாக்குதலால் ஏற்பட்ட காயங்கள் காரணமாகவே உயிரிழந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ அறிக்கை அவர்களின் பொய்யான வாக்குமூலத்தை முறியடித்ததைத் தொடர்ந்து சனிக்கிழமை இரவு குழந்தையின் தாய் அகிலா (Akhila) மற்றும் அவருடன் இருந்த நபர் அஷ்கர் (Ashkar) ஆகியோரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

பற்றி எரிந்த யாழ். பொது நூலகம் - வரலாற்றுக் கொடுமை அரங்கேறி 45 ஆண்டுகள்

பற்றி எரிந்த யாழ். பொது நூலகம் - வரலாற்றுக் கொடுமை அரங்கேறி 45 ஆண்டுகள்

மக்கள் ஆவேசம்

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (31-05-2026) விசாரணையின் ஒரு பகுதியாக ஆதாரங்களைச் சேகரிப்பதற்காக சந்தேகநபர்கள் இருவரும் அவர்கள் வசித்து வந்த வீட்டிற்குக் காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.

அப்போது அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள், இருந்த குறித்த நபரைக் கடுமையாகத் தாக்க முற்பட்டுள்ளனர்.

கேரளாவை உலுக்கிய கொடூரம்: ஒன்றரை வயதுக் குழந்தை அடித்துக் கொலை - தாய் உட்பட இருவர் கைது! | Kerala Toddler Murdered By Mother And Lover

குழந்தையைக் கொன்ற பாவி என முழக்கமிட்டபடி மக்கள் ஆவேசமடைந்ததால் நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் பெரும் சிரமப்பட்டுள்ளனர்.

சூழல் மோசமடைந்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் அவசர அவசரமாக ஆதாரங்களைச் சேகரித்துவிட்டு இருவரையும் அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த அசாம்பாவிதத்தின் போது சந்தேகநபர்களுக்குச் சொந்தமான வாகனம் ஒன்றும் மக்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

வலுவிழக்கும் ரூபாய் - தொடர்ந்து 320 ரூபாக்கு மேல் நிற்கும் டொலர்

வலுவிழக்கும் ரூபாய் - தொடர்ந்து 320 ரூபாக்கு மேல் நிற்கும் டொலர்

குழந்தையின் பாதுகாப்பு

அந்தப் பகுதியில் சில மாதங்களாக வசித்து வந்த இக்குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினருடன் அதிகமாகப் பழகுவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த குழந்தை அடிக்கடி அழுவதைக் கேட்டதாகவும் இதற்கு முன்பே குழந்தையின் இரு கைகளிலும் கட்டு (Plaster casts) போடப்பட்டிருந்த அளவுக்குக் காயங்கள் இருந்ததைத் தாங்கள் கவனித்ததாகவும் அண்டை வீட்டாரும் குழந்தையின் உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

கேரளாவை உலுக்கிய கொடூரம்: ஒன்றரை வயதுக் குழந்தை அடித்துக் கொலை - தாய் உட்பட இருவர் கைது! | Kerala Toddler Murdered By Mother And Lover

குழந்தையின் தந்தை, குழந்தை பிறப்பதற்கு முன்பே இறந்துவிட்டதாகவும் அதன் பின்னர் குடும்பத்திற்குள் ஏற்பட்ட குழப்பங்களால் குழந்தையின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்துப் பேசிய கேரள பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் பிந்து கிருஷ்ணா, இந்தத் துயரம் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது என்றும் குற்றவாளிகளுக்கு எதிராக மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

இக்கொடூரக் கொலை குறித்துக் காவல்துறையினர் மேல் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விநியோகம் குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

எரிபொருள் விநியோகம் குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015