அடுத்த கட்ட நகர்வு குறித்து விமல் வீட்டில் முக்கிய கலந்துரையாடல் -12 கட்சிகளும் பங்கேற்பு
Sri Lanka Podujana Peramuna
Wimal Weerawansa
Uthaya Gammanpila
By Vasanth
பொதுஜன பெரமுனவின் தலைமைப்பதவியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்க வேண்டுமென அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்த நிலையில் அந்த கட்சிக்குள் பாரிய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்றையதினம் அமைச்சர் விமல் வீரவன்சவின் வீட்டின் அவசர கலந்துரையாடலொன்று இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கலந்துரையாடலில் 12 கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டிலுள்ள அரசியல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே, கட்சித் தலைவர்கள் கூடியதாக அமைச்சர் உதய கம்மன்பில, இந்த கலந்துரையாடலுக்கு செல்வதற்கு முன்னர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி