செம்மணியை குற்றப்பிரதேசமாக அறிவிக்க வெளிவந்த ஆதாரங்கள்!
செம்மணிப் புதைகுழியில் அவதானிக்கப்பட்ட, மீட்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் அதனை குற்றப்பிரதேசமாகவே கருதவேண்டும் என சட்டத்தரணி கே.எஸ்.ரட்ண வேல் தெரிவித்துள்ளார்.
சிதிலங்கள் நிலமட்டத்திலிருந்து ஒன்றரை அடி தொடக்கம் இரண்டு அடி ஆழத்திலேயே புதைக்கப்பட்டுள்ளன என்றும், புதைகுழிக்குள் பல அசாதாரண சூழ்நிலைகள் காணப்படுகின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“செம்மணிப் புதைகுழியில் நேற்றையதினம் 12ஆம் நாள் அகழ்வுப்பணி இடம்பெற்றிருந்தது. மேலும் புதிய பகுதிகளிலும் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
கண்டுபிடிக்கப்பட்ட என்புத் தொகுதிகள் நில மட்டத்திலிருந்து 2 அடி ஆழத்திலேயே புதைக்கப்படிருக்கிறன.
இது சாதாரணமாக 'மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட' இடமாகத் தெரியவில்லை. மாறாக சடுதியாக புதைக்கப்பட்டது போல் காணப்படுகின்றது. சிறுவர்களின் என்புத் தொகுதிகளும் காணப்படுகின்றன. இது மிகப்பெரும் சர்சையை தோற்றுவித்திருக்கிறது.
எனவே முகத்தோற்றத்தின் அளவில், நிச்சயமாக குற்றம் நடைபெற்ற இடமாகவே இந்தப் புதைகுழி காணப்படுகின்றது” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
