இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றிய கனடா அரசு: தக்க பதிலடி கொடுத்தது இந்தியா
புதிய இணைப்பு
காலிஸ்தான் குழு தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியத் தூதரக அதிகாரியை கனடா வெளியேறும்படி உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவுக்கான கனடா தூதரக அதிகாரியை 5 நாட்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கான கனடா துணை தூதரை அழைத்த வெளியுறவு அமைச்சகம், இந்தியாவில் உள்ள கனடா தூதரை வெளியேற்றும் முடிவைப் பகிர்ந்தது.
முதலாம் இணைப்பு
காலிஸ்தான் படைப்பிரிவின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொலையான விடயம் தொடர்பில் இந்திய தூதரக அதிகாரி ஒருவரை கனடா அரசு வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் சீக்கியர்களுக்கென்று தனி மாநிலம் வேண்டும் என காலிஸ்தான் பயங்கரவாதிகள் வலியுறுத்தி வருகின்ற நிலையில் அதனை வலியுறுத்தி கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த வண்ணம் உள்ளனர்.
கடந்த மார்ச் மாதமும் கனடாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்
இந்நிலையில் காலிஸ்தான் பிரிவினரின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டி கனடா அரசிடம் இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது
இந்நிலையில்,காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த சில மாதங்களுக்கு முன் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலையில் கனடாவில் உள்ள இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் டொரான்டோவில் உள்ள துணைத் தூதர் அபூர்வா வஸ்த்தவா ஆகியோர் பிரதான பங்காற்றியவர்கள் என்று அவர்களின் புகைப்படங்களை கனடாவிலுள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிரசுரப்படுத்தினார்கள்.
இந்தக் கொலையில் கனடாவில் உள்ள இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் டொரான்டோவில் உள்ள துணைத் தூதர் அபூர்வா வஸ்த்தவா ஆகியோர் பிரதான பங்காற்றியவர்கள் என்று அவர்களின் புகைப்படங்களை கனடாவிலுள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிரசுரப்படுத்தினார்கள்.
அபத்தமான குற்றச்சாட்டு
இது குறித்து, நாடாளுமன்றத்தில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "இந்திய அரசாங்க முகவர்களுக்கும் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொலைக்கும் தொடர்பு இருப்பதற்கான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் உள்ளன. " என்று குறிப்பிட்டார்.
அந்த விடயம் பொய்யானது என்றும், அபத்தமான குற்றச்சாட்டு என்றும் இந்த குற்றச்சாட்டு ஒரு உள்நோக்கம் கொண்டதாக காணப்படுவதாகவும் இந்தியா தெரிவித்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் "இன்று நாங்கள் இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரிகையை நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ளோம். அவர் இந்தியாவின் வெளிநாடு புலனாய்வு அமைப்பின், ஆராய்ச்சி மற்றும் ஆய்வுப் பிரிவின் (RAW) தலைவராக செயல்பட்டுள்ளார்'' என்று கனேடிய பிரதமர் கூறியிருந்தார்.
இந்திய தூதரக அதிகாரியின் வெளியேற்றத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
