கிளிநொச்சியில் எரிந்து நாசமான தும்புத் தொழிற்சாலை
கிளிநொச்சியில் மின்னொழுக்கு காரணமாக தும்புத் தொழிற்சாலை ஒன்று எரிந்து நாசமாகியுள்ளது.
கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட கோணாவில் பகுதியில் உள்ள தும்பு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தானது நேற்று (7) இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
35 இலட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் சேதம்
குறித்த விபத்தில் 35 இலட்சத்துக்கு மேற்பட்ட பெறுமதியான நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த தீ பரவியமையால் தும்பு மற்றும் மின் உபகரணங்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளது
இதன் போது கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு வாகனம் பழுதடைந்த நிலையில் இருந்தமையால் தண்ணீர் பவுசர் மற்றும் அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மின் இணைப்பு வயரில் சேதாரம்
இருப்பினும் தமது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் நிற்கதியாக நிற்பதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இரண்டு தடவைகள் மின் இணைப்பு வடத்தில் சேதாரம் ஏற்பட்ட நிலையில் அதனை இரண்டு தடவைகள் மின்சார சபையினர் வந்து அறுந்த வடத்தை முடிந்தே சென்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாகவே தும்புத் தொழிற்சாலை எரிந்து நாசமாகி உள்ளதாக தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |