கிளிநொச்சியில் கணவனின் கொடூர செயல் மனைவியை கொன்று தானும் விபரீத முடிவெடுத்தார் - அநாதைகளாகினர் பிள்ளைகள்
srilanka
kilinochchi
By Vasanth
கிளிநொச்சியில் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன் தானும் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சிவபுரம் பகுதியில் இன்று நடைபெற்றது.
குடும்பத்தகராறு காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாணையில் தெரியசந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 3பிள்ளைகளின் பெற்றோரான வேலாயுதம் சிவஞானம் வயது 38, சிவஞானம் குகனேஸ்வரி வயது 36,ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.
இச்சம்பவத்தினால் 16, 13, 6 வயதுடைய மூன்று பிள்ளைகள் அநாதையாகியுள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்