கூரிய ஆயுதங்களுடன் கருணாவை சந்திக்க சென்ற நபர்!
கிளிநொச்சியில் கருணாவை சந்திக்க கூரிய ஆயுதத்துடன் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பி மேலும் தெரியவருகையில், நேற்றைய தினம் முரசுமோட்டை பகுதியில் தங்கியிருந்த கருணாவை சந்திக்க சென்ற நபரை கடமையில் நின்ற பொலிசார் சோதனைக்குட்படுத்திய வேளை அவரிடமிருந்து கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிசார் குறிப்பிடுகின்றனர். அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது கத்தி மற்றும் அரிவாள் ஆகியவற்றை வயலிற்கு பசைளை இடுவதற்காக எடுத்து சென்றதாகத் தெரிவித்தார்.
இந்நிலையிலேயே, வீடு திரும்புகையில் கருணவை சந்தித்து செல்ல சென்றதாகவும் சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.