கிளிநொச்சியில் புதுவருட தினத்தில் இடம்பெற்ற படுகொலை- தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!
கிளிநொச்சி பரந்தனில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பரந்தன் சந்தியில் உள்ள அனைத்து கடைகளும் பூட்டப்பட்டுள்ளன.
கிளிநொச்சி பரந்த பகுதியில் புத்தாண்டு அன்று இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதோடு, மற்றொரு இளைஞன் படுகாயமடைந்துள்ள சம்பவத்தையடுத்தே இன்று 03.01.2022 இளைஞரின் கொலை கண்டித்து பரந்தன் சந்தியில் உள்ள அனைத்து கடைகளும் பூட்டப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கிளிநொச்சி பரந்த பகுதியில் புதுவருட தினத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டதோடு, மற்றொரு இளைஞன் படுகாயமடைந்திருந்தார்.
இச் சம்பவம் புத்தாண்டு தினத்தன்று இரவு 7.30 மணியளவில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் பரந்தன் சந்திக்கருகில் இடம்பெற்றுள்ளது. இதன்போது பரந்தன் பகுதியைச் சேர்ந்த கார்திக் வயது 24 என்பவர் உயிரிழந்துள்ளதோடு, அவரது அக்காவின் மகன் காயமடைந்து வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் படுகாயமடைந்த இளைஞன் தெரிவித்திருந்ததாவது,
கார்திக்கை நான்கு பேர் கொண்ட குழுவினர் தலைக் கவசத்தினால் தாக்கிக்கொண்டிருந்த போது தான் அதனை தடுக்க சென்றதாகவும் இதன் போது தன்னை அவர்கள் கூரிய ஆயுதத்தால் வெட்டியதனால் தான் காயமடைந்தாகவும், தெரிவித்திருந்தார்.
பின்னர் அவர்கள் கார்திக்கையும் வெட்டிக் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நேற்றைய தினம் சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி காவல்துறையினர் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் பதில் நீதவானும் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.


