பளையில் விஷமிகளின் அட்டகாசம் - வெட்டி வீசப்பட்ட பாவற்கொழுந்துகள்
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தர்மக்கேணி பகுதியில் விவசாயி ஒருவரின் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பாவற் கொழுந்துகள் விசமிகளால் வெட்டி சேதமாக்கப்பட்டுள்ளன.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தர்மக்கேணி பகுதியில் விவசாயத்தையே தனது வாழ்வாதாரமாக செய்து வந்துள்ள நிலையில் குறித்த விவசாயியின் காணியில் பயிரிடப்பட்டுள்ள பாவற் கொழுந்துகள் (25)நேற்று முன்தினம் இனந்தெரியாத சில விசமிகளால் அரிவாளால் வெட்டி வீசப்பட்டுள்ளது.
சுமார் நூறுக்கும் மேற்பட்ட பாவற் கொழுந்துகள் சேதமாக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் விவசாயி கூறுகையில், இவ்வாறான செயற்பாடுகள் மனவேதனை அளிப்பதாகவும் நாட்டில் ஏற்பட்டுள் விலை அதிகரிப்புகள் மற்றும் பசளை தட்டுப்பாடுகள் பசளை விலை ஏற்றங்களுக்கு மத்தியில் தாம் விவாசாயத்தை மேற்கொண்டு வருகின்றமையே பாரியளவில் கஸ்டமாக உள்ள வேளையில் இவ்வாறான ஈனச்செய்கைகள் மனதளவில் தாம் அதிகளவில் பாதிப்படைந்துள்ளதாகவும் தமது வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக பளை காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் கூட பளையில் விவசாயி ஒருவரின் மிளகாய் கன்றுகள் விஷமிகளால் பிடுங்கி எறியப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.







