தனது ஐந்து வயது மகளுக்கு வாயின் இரண்டு புறமும் நெருப்பால் சூடு வைத்த தாய் - கிளிநொச்சியில் கொடூரம்
தனது 5 வயது மகளின் வாயின் இரண்டு புறமும் நெருப்பால் சுட்டு, கடுமையான எரிகாயத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் தாய் ஒருவரை கிளிநொச்சி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிள்ளையின் தந்தை தொழிலுக்கு புறப்பட்டு சென்றிந்த போது, தாய் மகளின் வாய் பகுதியில் நெருப்பால் சுட்டுள்ளார். பிள்ளையின் அலறல் சத்தம் கேட்டு, பிள்ளையின் பாட்டனார், பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட தாய், உணவு சமைத்துக்கும் பொழுது, அடிக்கடி சுட்டித்தனம் செய்தல், பொய் கூறுதல் ஆகியவற்றால் கோபமடைந்த தாய், அடுப்பில் இருந்த நெருப்பை எடுத்து பிள்ளை சூடு வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
அக்கராயன்குளம், விநாயகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த 5 வயதான சிறுமியே சூட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 32 வயதான என். தயாழினி என்ற சிறுமியின் தாயை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மேலதிக நீதவான் கார்த்திகா சர்மா உத்தரவிட்டுள்ளார்.