சட்ட விரோத செயற்பாடு- கிராம சேவையாளரை டிப்பரால் மோத முயற்சித்து உயிர் அச்சுறுத்தல்!

police kilinochchi tharmapuram
By Kalaimathy Jun 15, 2021 08:30 AM GMT
Report

சட்டவிரோத மண்ணகழ்வை கட்டுப்படுத்த முயற்சி எடுத்த கிராம சேவையாளரை டிப்பரால் மோத முயற்சித்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட சம்பவம் தொடர்பில் கிராம சேவையாளரினால் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கரவட்டித்திடல் பழைய கண்ணகி அம்மன் கோவில் அருகாமையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றள்ளது.

அப்பகுதியில் சட்டவிரோதமாக மண்ணகழ்வு இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் தொடர்ச்சியாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த அதேவேளை, பல்வேறு தரப்பினருக்கும் பொது மக்களால் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது.

சட்டவிரோத மண்ணகழ்வை கட்டுப்படுத்துவதற்கு கிராம சேவையாளர்கள் தமக்கு ஒத்துழைப்பதில்லை என இறுதியாக இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனான கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.

அதனையடுத்து சட்டவிரோத மண்ணகழ்வினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து கிராம சேவையாளர்களிற்கும் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரனால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த பகுதியில் சட்ட விரோதமாக மணல் குவிக்கப்பட்டு டிப்பர் வாகனத்தில் ஏற்றப்படுகின்றமை தொடர்பில் கிராம சேவையாளர் ரி.கலைரூபனுக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாட்டை கட்டுப்படுத்த அக்கிராம சேவையாளர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது டிப்பர் சாரதி உட்பட 6பேர் குறித்த சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்களுடன் பேசிய கிராம சேவையாளருக்கு ஆரம்பத்தில் ஒத்துழைப்பு வழங்க முன்வந்த குறித்த குழுவினர், பின்னர் டிப்பர் வாகனத்தினால் கிராம சேவையாளரை மோத முயற்சித்ததுடன், அச்சுறுத்தும் வகையிலும் நடந்த கொண்டதாக கிராம சேவையாளரினால் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் நேற்று பிற்பகல் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த டிப்பர் வாகனத்திற்கு அனுமதிப்பத்திரம் ஏதும் இருந்திருக்கவில்லை எனவும், அப்பகுதி மணல் அகழ்விற்கு ஏற்ற அனுமதிக்கப்பட்ட பகுதி இல்லை எனவும் தெரிவிக்கும் கிராம சேவையாளர், தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் பெயர் பலகையுடன் குறித்த சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வாகனத்தின் சாரதி ஒட்டுசுட்டான் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், தன்னை அச்சுறுத்திய  செயற்பாடு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனது பிரதேசத்தில் சட்டவிரோத மண்ணகழ்வை கட்டுப்படுத்த பொலிஸார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிராம சேவையாளர் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முயன்ற நிலையில் இருவேறு அச்சுறுத்தலுக்கு ஏற்கனவே உள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முயலும் கிராம சேவையாளர்களிற்கு பாதுகாப்பு வழங்க தவறும் பொலிஸார், மாவட்ட கூட்டங்களில் கிராம சேவையாளர்கள் ஒத்துழைப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைப்பதானது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


GalleryGalleryGalleryGallery
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025